மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆயம்மாள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிய நிலையில் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆயம்மாளுக்கு அதேபகுதியைச் சேர்ந்த அன்புநாதன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று இருவரும் திருவாதவூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தெற்குத் தெரு திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஆண்டிப்பட்டி விலக்கில் உள்ள நல்லான்பெத்தான் கண்மாய் சாலையில் வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழி மறித்து கழுத்து, கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி படுகொலை செய்தனர்.