தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இடமாற்றம் விவகாரம்:  ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - மாநில மனித உரிமை ஆணையம்

மதுரை: அங்கன்வாடி மையத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமையலரையும், உதவியாளரையும் இடமாற்றம் செய்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க  மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

By

Published : Jun 14, 2019, 9:30 AM IST

மதுரை வலையபட்டி கிராம அங்கன்வாடி மையத்தில் சமையலராகவும், உதவியாளராகவும் நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரு பெண்களுக்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து இரு ஊழியர்களைப் பணி மாற்றம் செய்தது குறித்து ஜூலை 17-க்குள் விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மனித உரிமையை மீறி இருவரையும் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details