தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் ஒரே ஆண்டில் இத்தனை கிலோ தங்கம் கொள்ளையா? - அதிர்ச்சியளிக்கும் ஆர்டிஐ தகவல் - madurai theft latest RTI report

மதுரை: 2019ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் மட்டும் எத்தனை வீடுகளில், எவ்வளவு தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

theft
theft

By

Published : Feb 17, 2020, 10:59 AM IST

மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இதனால், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு எத்தனை வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன? அதில் எத்தனை சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டன என்று கேட்டிருந்தார்.

அதற்கு ஆணையர் அலுவலகம் அளித்த தகவலின்படி, 136 வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளதாகவும், அதில் 24 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் நான்கு கிலோ தங்கம் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐ அறிக்கையின் தகவல்

அதேபோல், 2019ஆம் ஆண்டு மட்டும் மதுரை மாநகரில் 66 செயின் பறிப்புச் சம்பவங்களில், 312 சவரன் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 92 சவரன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் மதுரை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details