தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் பரத், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டய படிப்பு முடித்து அச்சம்பத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறேன். எலக்ட்ரோபதி / எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புகள் மத்திய தொழில்துறையின் கீழ் வருகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் எலக்ட்ரோபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிய முடியும்.
ஆனால் காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு அளித்து வருகின்றனர். இதனால் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் பதிவாளரிடம் மனு அளித்தோம். ஆனால் பதிவாளர் எங்கள் கோரிக்கை நிராகரித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி மற்றும் பதிவு சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளிக்க கூடாது என கடந்த மார்ச் 5ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதனால் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி முறைக்கு அங்கீகாரம் வழங்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கடந்த ஜூலை 1ஆம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிகள் சிகிச்சை அளிக்க தடை விதித்து பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது.