தமிழ்நாடு

tamil nadu

ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பதுக்கல் - ஒருவர் கைது

By

Published : Jul 28, 2021, 8:56 AM IST

மதுரை அருகே ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி பதுக்கல்  madurai news  madurai latset news  madurai Hoarding ration rice and wheat  Hoarding ration rice and wheat in madurai  ration rice  crime news  குற்றச் செய்திகள்  மதுரை செய்திகள்  மதுரையில் ரேஷன் அரிசி கோதுமை மூட்டைகள் பதுக்கல்  ரேஷன் அரிசி  ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கல்
ரேஷன் அரிசி கோதுமை மூட்டைகள் பதுக்கல்

மதுரை: ஐராவதநல்லூர் அருகே ஒரு குடோனில் ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் கடத்தி வைத்திருப்பதாக, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் காவல் துறையினர் அந்த குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 15.95 டன் ரேஷன் அரிசி, 4.6 டன் கோதுமை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், குடோன் உரிமையாளரான முத்து என்ற கொரில்லா முத்துவை கைது செய்தனர்.

மேலும் இவர் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைக்காரர்களிடம் இருந்து ரேஷன் அரிசி, கோதுமையை வாங்கி வந்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களான மகாராஜன், மணி, பழனி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்கம்: குப்பைக் கிடங்கில் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details