தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து என்பது மதம் அல்ல நாடு; சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னனே - ஹெச்.ராஜா - Rajaraja Chola was a Hindu king

இந்து என்பது மதம் அல்ல நாடு எனவும், அரசியலமைப்புச் சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன் தான் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்து என்பது மதம் அல்ல நாடு; அரசமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னனே - ஹெச்.ராஜா
இந்து என்பது மதம் அல்ல நாடு; அரசமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னனே - ஹெச்.ராஜா

By

Published : Oct 5, 2022, 7:19 PM IST

மதுரை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் சங்க அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசியவர்,"தடை செய்யப்பட்ட PFI அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமா, சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு அரசு அனுமதிக்கக் கூடாது. 1991 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

PFI உடன் விசிக இருக்கும் என திருமா பேசியுள்ளார். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவனும், சீமானும் தேச துரோகிகள். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் நல்லவர். அவருக்கு சுற்றி இருப்பவர் கொம்பு சீவி விடுவார்கள். அவர் தலையை சிலுப்பினால் 1991-ல் நடந்தது இப்போது நடக்கும்.

திராவிட மாடல் ஆட்சி மானக்கேடான ஒன்று. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் பாக்கெட்டில் 'இது ஹலால் செய்யப்பட்டது' என குறிப்பிட பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திமுக திமிர் பிடித்தவர்கள் கட்சி. மந்திரிகள் அராஜக போக்கோடு செயல்படுகிறார்கள். தமிழ் மக்களுக்கு விரோதமான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பாண்டிச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் அமைதியாக தான் நடந்தது. டிஜிபி சைலேந்திர பாபு தமிழ்நாட்டில் நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளார். அவர் டிஜிபியாக இருக்க தகுதி இல்லை. ராஜராஜ சோழன் சிவ பக்தன். எனவே, அவர் இந்து தான். இந்து என்பது மதம் அல்ல, அது நாடு. அரசியலமைப்பு இந்துவை இந்துக்கள் அல்லாதோர் என வகைப்படுத்தியுள்ளது. இந்த மண்ணில் பிறந்த மதம், இந்து மதம் தான்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா

2300ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி சங்கரர் அவதரித்தார். அப்போது 72 விதமான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில் அதை ஆறாக ஒருங்கிணைத்தார். சிவம் வேறு, இந்து வேறு அல்ல. வேதம் வேறு, சைவம் வேறு அல்ல. வேதம் வேறு, தமிழ் வேறு அல்ல. எனவே ராஜராஜன் இந்து தான். அரசியலமைப்புச்சட்டப்படியும் ராஜராஜன் இந்து தான். இந்து மதத்திற்குத் தொடக்கமே கிடையாது. அது அநாதி மதம். மாமன்னன் ராஜராஜ சோழன் 100% இந்து மன்னன் தான்.

அரசியலில் கூட்டணி என்பது தற்காலிகமானது. பாஜகவுக்கு எதிராக மம்தா - ஸ்டாலின் உள்ளிட்டோரால் அமைக்கப்படும் கூட்டணியால் பலனில்லை. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் தேசியக்கல்வி கொள்கையில் உள்ளது. அதை திருடி எடுத்து திமுக அரசு செயல்படுத்தியுள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக; ஆன்மிகத்தை அரசியலுக்கு பயன்படுத்துபவர்களுக்கு எதிரானது - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details