தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களை திறக்க தேங்காய் உடைத்த இந்து ஆலய பாதுகாப்புக் குழு! - Hindu Temple Protection Committee

மதுரை: ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள மூன்று லட்சம் கோயில்களை திறக்க வலியுறுத்தி திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு  தேங்காய் உடைக்கும் போராட்டம்  திருப்பரங்குன்றம்  மதுரைச் செய்திகள்  madurai news  Hindu Temple Protection Committee  thiruparankundram
கோயில்களைத் திறக்க தேங்காய் உடைத்த இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு

By

Published : May 28, 2020, 1:12 PM IST

கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கோயில்கள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள கோயில்களையும் திறக்கவேண்டும் என்று வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வாசலில் தேங்காய்களை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து பேசிய அந்தக் குழுவின் மாநிலச் செயலாளர், "பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மதுக்கடைகளைத் திறந்த மாநில அரசு, மூடப்பட்டுள்ள மூன்று லட்சம் கோயில்களையும் திறக்க வேண்டும். அனைத்து முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகத் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் தேங்காய் உடைக்கும் போராட்டம்

ஒவ்வொரு முக்கிய கோயில்களையும் நம்பி 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயில்களை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவில் கோயில் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு கோயில் திறப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருந்துவருகிறது" என்று தெரிவித்தார். இந்தப் போராட்டத்தால் திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:ஓசி சிகரெட் தராத டீ கடைக்கு தீ வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details