தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!! - காவல்துறை விசாரணை

ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி 5 மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

By

Published : Feb 1, 2023, 12:19 PM IST

மதுரை: சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40) இவர் ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள எம்.கே. புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் இந்து மக்கள் கட்சியில் தென் மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு கடை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல் மற்றும் அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஜெய்ஹிந்தபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் சந்தேகத்திற்குரிய 5 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரை கோட்ட பெண் ரயில்வே ஊழியருக்கு சாரண, சாரணிய சம்மேளனம் விருது!

ABOUT THE AUTHOR

...view details