மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால் காவல் துறை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாவா பள்ளிவாசல் இருப்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனக் கூறி பல வருடங்களாக திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிவருகின்றனர்.