தமிழ்நாடு

tamil nadu

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்!

By

Published : Feb 19, 2022, 11:41 AM IST

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள வாக்குச் சாவடியில், வாக்களிக்க வந்த பெண் ஹிஜாப் அணிந்து இருந்ததால் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் தேர்தல் அலுவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

hijab-issue-in-madurai
hijab-issue-in-madurai

மதுரை : மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8ஆவது வார்டுக்கான வாக்குப்பதிவு அல் அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அதே வார்டை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார்.

அப்போது வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவர் கிரி ஹிஜாப் அணிந்து வாக்குச்சாவடிக்குள் வந்ததை எதிர்த்து அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாஜக முகவர் வெளியேற்றம்!

இதற்கு அதிமுக திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் அலுவலர்களால் பாஜக முகவர் கிரி வாக்குச் சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க : கோயம்புத்தூரில் துணை ராணுவம் வரும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details