அமெரிக்கா, நியூயார்க் நகரத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சிலை கடத்தல் சம்பந்தமாக என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வாழ் குடியுரிமை பெற்றுள்ளேன். இந்த நிலையில் "Art of Past" என்ற தலைப்பில் சிலை கண்காட்சி நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் வைக்கப்பட்டதாக தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் சொந்த வேலை காரணமாக ஜெர்மனி சென்றிருந்தபோது "Red Corner Notice" மூலம் 2011ல் ஜெர்மனி காவல் துறையினர் என்னை கைது செய்தனர். 2012ஆம் ஆண்டு இந்திய காவல் துறையினரிடம் என்னை ஒப்படைத்தனர்.