திருச்செந்தூர் மணல்மேடு சுரேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் " திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2017ஆம் ஆண்டு கிரிபிரகாரம் மேற்கூரை இடிந்து ஒருவர் இறந்தும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கோயில் நிர்வாகிகளை காப்பாற்றும் நோக்கில் வழக்கு கைவிடப்பட்டது.
மேலும் கோயில் நிர்வாகம் சார்பாக 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை கிரிபிரகாரம் தூண்கள் பழுது பார்ப்பது, பெயிண்டிங் வேலை செய்வதற்கு ஒப்பந்தகாரர் சுலோசனை என்பவருக்கு 4 லட்சம் 70 ஆயிரத்து 375 ரூபாய் ஒப்பந்தம் வழங்கபட்டு பணிகள் முறையாக நடைபெற்றதா என்று ஆய்வு செய்யாமல் 2016ஆம் ஆண்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
ஆகவே முடிக்கப்பட்ட வழக்கை விபத்து வழக்காக பதிவு செய்ய உத்தரவிட்டு முறையாக மறு விசாரணை செய்து விபத்துக்கு காரணமான ஒப்பந்தாரர், கோயில் நிர்வாக அதிகாரி, சரியான முறையில் விசாரணை செய்யாமல் வழக்கை மூடிமறைத்த காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கவும், இறந்த, காயம் ,அடைந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.