தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோத தஞ்சம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணை - madurai high court

மதுரை: இலங்கையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, மீண்டும் இலங்கை செல்ல மனுதாக்கல் செய்த வழக்கு நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

மதுரை
மதுரை

By

Published : Mar 14, 2020, 8:57 AM IST

இலங்கையைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, மீண்டும் இலங்கை செல்ல மனுதாக்கல் செய்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, போலி ஆதார் அட்டையை தயாரித்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் உத்தரவின் படி அவர்கள் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இருவரும் இலங்கை சென்று சிறையில் உள்ளதை அரசு வழக்கறிஞர் கடந்த விசாரணையின் போது உறுதிபடுத்தினார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையில், இதில் உடந்தையாக இருந்தவர்களையும், கூட்டு சதிப் பிரிவில் சேர்த்து தேவையான மாற்றங்களை முறைப்படி செய்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திட வேண்டும். பின்னர் இது குறித்த தகவல்களை அறிக்கையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:திருவள்ளூரில் ஒரு ரூபாய் பிரியாணி - அலைமோதிய மக்கள் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details