மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார் அதில், "இந்திய அரசு சார்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் உயர் கல்விக்கான உதவி தொகை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதனால் வருடம்தோறும் சுமார் 20,000 மாணவர்கள் மேற்படிப்பிற்காக பயன்பெற்றனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான உயர்கல்வி உதவி தொகை திட்டத்தில், அரசு கலந்தாய்வில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் நிர்வாகத்தின் கீழ் பயிலும் சுமார் 7000 மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.