மதுரை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர், தாமஸ் சாமுவேல் இவர் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவிகள் அளித்தப் புகாரின் அடிப்படையில் இவரை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட போலீசார், இவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இவரது தாயார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜரானார்.