தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்டம்: மாணவியின் தாயார் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு! - madurai district news

மதுரை: தருமபுரி மருத்துவ மாணவியின் தாயார் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Madurai high court bench

By

Published : Nov 21, 2019, 7:38 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தருமபுரியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் தயார் மைனாவதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன்.

எனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது உடல்நலம் கருதி எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் தாயார் மைனாவதி விசாரணையின் போது ஆள்மாறாட்டம் செய்ததின் முழு விபரங்களை காவலர்களிடம் தெரிவித்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக காவலர்களிடம் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'புலிகளால் ஆபத்து' - திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details