திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"திருச்சி திருவெரும்பூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 7ஆம் நூற்றாண்டை சேர்ந்த எறும்பீஸ்வரர் கோயில் 600 அடி மலை உச்சியில் உள்ளது. இக்கோயில் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. ஆனால், உரிய பராமரிப்பு இல்லை. இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளன.
கோயிலின் தெப்பக்குளமும், முறையாகப் பராமரிக்கப்படவில்லை. கோயில், மலையைச் சுற்றி ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக கோயிலை புனரமைக்கவும், கோயில், மலை மற்றும் சுற்றுப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.