தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ' சிவகங்கை வன உயிரின பூங்கா சீரமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக வன உயிரின பூங்கா கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. அங்கிருந்த 44 புள்ளிமான்கள் , எட்டு முயல்கள், 40 புறாக்கள், ஆறு சீமை எலிகள், இரண்டு பச்சை கிளிகள் ஒப்பந்த அடிப்படையில் கோடியக்கரை வனப்பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அவர் 41 புள்ளி மான்களே ஒப்படைக்கப்பட்டதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மீதமுள்ள மூன்று புள்ளி மான்கள் என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை' இது தொடர்பான நடவடிக்கை எடுக்கக் கோரி மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் 2 புள்ளி மான்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக, தஞ்சை வனப்பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலைக் காண அவரது சகோதரிக்கு அனுமதி!