தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடற்கரையோரம் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது ? - கடற்கரையோரம் அமைக்கப்படும் கடைகள்

கன்னியாகுமரி: சபரிமலை சீசன் காலத்தை முன்னிட்டு கடற்கரையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

high court of madras madurai branch post burn the case of kanniyakumari sea shore shop

By

Published : Oct 2, 2019, 7:38 AM IST

கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மத்திய அரசு சமீபத்தில் 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரையோரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என தடைவிதித்துள்ளது.

ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து கதிரவன் மறையும் நிலையம்வரை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம்வரை சபரிமலை சீசன் காலத்தை முன்னிட்டு கடற்கரையோரம் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதுபோன்ற அனுமதியை வழங்கக் கூடாது. ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் தற்காலிக கடைகள் மூலமாக ஏற்படும் குப்பைகளும், நெகிழிக் கழிவுகளும் நேரடியாக கடலில் கலக்கிறது. இதனால் கடலில் வசிக்கும் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்கிறது.

கன்னியாகுமரி பேரூராட்சியின் இந்தச் செயல் கடற்கரையின் சூழலை பாதிக்கும். எனவே, கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து கதிரவன் மறையும் நிலையம்வரை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம்வரை சபரிமலை சீசன் காலத்தில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: காமராசர் பல்கலைக்கழகத்தின் 53ஆவது பட்டமளிப்பு விழா!

ABOUT THE AUTHOR

...view details