தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.திருநாவுக்கரசு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் ஏன் வளர்ப்பதில்லை..? - நீதிபதிகள் கேள்வி - High-court-nh-tree-plant
மதுரை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

High-court-nh-tree-plant
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விசாரணைக்கு பின்னர், தேசிய நெடுஞ்சாலை மரங்கள், பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்படுகிறது. ஆனால் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் ஏன் வளர்ப்பதில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
TAGGED:
High-court-nh-tree-plant