தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலவளவு கொலையாளிகள் விடுதலை விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்! - மதுரை

மதுரை: மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த ஒரு தண்டனை காலத்தை தமிழ்நாடு அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்து இருப்பது கண்டனத்துக்குரியது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

high-court-melavalavu-release

By

Published : Nov 18, 2019, 1:41 PM IST

கடந்த 1996ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து முருகேசன் உட்பட ஏழு பேரை, 1997இல் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் தண்டனை அனுபவத்து வந்த மூன்றுபேர், ஏற்கெனவே அண்ணா பிறந்த நாளில் நன்னடத்தைக் காரணமாக முன் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரை தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளது.

இதனையடுத்து, 13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்னவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால், தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, 7 பேர் கொல்லப்பட்டுள்ள வழக்கில், 13 பேர் விடுதலையின் அரசாணையின் நகல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் விதித்த ஒரு தண்டனை காலத்தை, தமிழ்நாடு அரசு எளிதாகக் கையாண்டு குற்றவாளிகளை விடுவித்திருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்த நீதிபதிகள், 13 பேரின் விடுதலை செய்யப்பட்டதன் அரசாணையை தாக்கல் செய்யவும், 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

சுற்றுப்புறத்தை பாதுகாத்தல் குறித்து கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி!

ABOUT THE AUTHOR

...view details