மதுரை: திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் என்பவர் ஆதிகேசவர் பெருமாள் கோயில் நகை விவரங்கள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருவட்டாறு ஆதிகேசவர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்கக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோயிலின் கலசத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கோயில் கும்பாபிஷேகத்தின் போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. கோவிலில் தங்க ஆபரணங்கள், பழைய கலசம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தேன்.
முன்னதாக 1992ஆம் ஆண்டு ஆதிகேசவர் பெருமாள் கோயிலில் திருட்டு சம்பவம் நடைபெற்று கோயிலுக்குச் சொந்தமான தங்க அங்கி உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போயின. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்குச் சொந்தமான பல தங்க ஆபரணங்கள், சிலைகள் எங்கே உள்ளன என தெரியவில்லை.