தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய நிகழ்வுகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கலாம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை - மாட்டு வண்டி பந்தயம்

கிராம மக்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுக்கு, காவல் துறையினர் உரிய விதிமுறைகளை வகுத்து அனுமதி வழங்கலாம், என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Feb 3, 2023, 12:45 PM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனவேந்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அதில், "தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பொன்காடு கிராமத்தில் உள்ள அடைகாத்தான் அய்யனார் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் அனைவரும் இணைந்து ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே கடந்த வருடம் ரேக்ளா பந்தயம் எங்கள் கிராமத்தில் நடைபெற்றது. எனவே இந்த வருடமும் ரேக்ளா பந்தயம் நடத்துவது தொடர்பாக கடந்த ஜனவரி 23 ஆம் தேதி அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்பொழுது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே ரேக்கலா பந்தயம் நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு முன்பாக விசனைக்கு வந்தது. அப்போது, "கிராம மக்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுக்கு, காவல் துறையினர் உரிய விதிமுறைகளை வகுத்து அனுமதி வழங்கலாம்" என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருகிற 5 ஆம் தேதி நடைபெற உள்ள மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயத்திற்கு உரிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்க, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:தாயமங்கலத்தில் அனல் பறந்த 'ரேக்ளா ரேஸ்'

ABOUT THE AUTHOR

...view details