மதுரை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மதியாரி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தேவகோட்டை பகுதியில் நான் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேவகோட்டை தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நில ஆக்கிரமிப்பு சட்டபடி உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவகோட்டை தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
அந்த மனுவானது நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவில், "இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் நில ஆக்கிரமிப்பு சட்டத்தின்படி ஆக்கிரமிப்பாளருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும் அதன் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.