மதுரை:விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 10 வருடகளாக சிவகாசியில் இருந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு பட்டாசு பொருட்கள், பேப்பர் பொருட்கள் போன்றவை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கான உரிய அனுமதி பெற்ற பின்பு தான் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இத்தகைய பொருட்களை இருப்பு வைத்து இருக்கும் அலுவலகத்தை அக்டோபர் 20ஆம் தேதி அன்று ஆய்வு செய்து, உரிய அனுமதி இல்லாமல் பட்டாசுகள் வைத்திருப்பதாக கூறி, விஸ்வநத்தம் கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பெயரில், அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
மேலும், சட்ட விரோதமாக பட்டாசு பொருட்களை வைத்திருப்பதாக கூறி, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது முற்றிலும் சட்டத்திற்கு எதிரான செயலாகும். எனவே உரிய அனுமதி பெற்று லாரி சேவை மூலம் பொருட்களை அனுப்பப்படும் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.