மதுரை:கரூரைச் சேர்ந்த மகேஷ் குமார், மதுரையைச் சேர்ந்த தனசேகர பாண்டியன், ராஜரத்தினம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, "கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அதிகம் உள்ள நிலையில், அவர்கள் வெவ்வேறு துறைகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில் பணி அமர்த்தப்பட்டனர். அதன் அடிப்படையில் நாங்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டோம்.
சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டதற்கு இரண்டாம் தரத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால், பலர் அத்தகுதியைப் பெறவில்லை. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு, இரண்டாம் தரத்தில் முதுகலை பட்டப் படிப்பு படித்தவர்களை சிறப்பு அலுவலர்களாகவும், தகுதி பெறாதவர்களை சிறப்பு அலுவலர் கிரேட் 2 என்றும் பிரித்தனர்.