தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுகைக்கு தண்ணீர் தேவை -உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு - கல்லணை

மதுரை: கல்லணை கால்வாயிலிருந்து புதுக்கோட்டை நாகுடி பிரிவு பிரதான கால்வாய்க்கு 286 கன அடி தண்ணீர் திறக்கக் கோரிய வழக்கில், பொதுப்பணித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt bench

By

Published : Aug 28, 2019, 9:29 PM IST

புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் துணைத் தலைவர் கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு அறந்தாங்கி, மணல்மேல்குடி, ஆவுடையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த மூன்று தாலுகாக்களில் ஏறத்தாழ 110 நீர்நிலைகள் உள்ளன.

கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, நாகுடி பிரதான கால்வாய்க்கு 194 கன அடி நீர் கிடைக்கப்பெறும். இதன் மூலம் 16 ஆயிரத்து 641. 35 ஏக்கர் அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இதேபோல திருவாப்படை கால்வாய்க்கு 92 கனஅடி நீர் கிடைக்கப்பெறும். அதனால் 6,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கல்லணை கால்வாயில் இருந்து திருவாப்படை கால்வாய், நாகுடி பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால், அதனை நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆகையால் மேட்டூர் அணையிலிருந்து கல்லணை கால்வாய்க்கு 4,500 கன அடி நீரை திறக்கவும், புதுக்கோட்டை நாகுடி பிரிவு பிரதான கால்வாய் மற்றும் திருவாப்படை பிரதான கால்வாய்க்கு 286 கன அடி தண்ணீரை 2020 ஜனவரி மாதம் வரை திறக்கவும் உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details