தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி போல் கலையூரிலும் தொல்லியல் ஆய்வு நடக்குமா?

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கலையூரில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court bench

By

Published : Oct 11, 2019, 12:12 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.

அதில், 'ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமம் கலையூர். இங்கு பராமரிப்புப் பணிகளுக்காக நிலத்தை தோண்டியபோது, முதுமக்கள் தாழி, பழமையான ஒரு மனிதனின் பல், சுடுமண் சிற்பம் போன்ற பல பொருள்கள் கிடைத்தன. இந்த அரியவகை பொருள்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதேபோன்று வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளதும், இந்தக் கலையூரிலிருந்து 50 கி.மீ. தூரம் மட்டுமே உள்ள கீழடியில், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் பல பழமையான பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருள்கள் சங்க காலத்தில், எழுத்து நாகரிகம் இருந்தது என்பதையும், பல மொழிகளுக்கும், நாகரிகத்திற்கும் முந்தையது தமிழ் என்பதனை கீழடியில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துவருகிறது.

இதேபோல் கலையூரிலிருந்து கிழக்குப் பகுதியில் சுமார் 50 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகன் குளத்திலும் ஏராளமான அரியவகை கலைப் பொருள்களும் கிடைத்துள்ளன. இதுபோன்ற ஆய்வுகள் நமது பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே தற்போது அரிய பொருள்கள் கிடைத்துள்ள கலையூர் ஊரணிப் பகுதியிலும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தொல்லியல் ஆய்வுகள் நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details