மதுரை:மேலூர் அருகேயுள்ள மணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர், பாரதி(40). இவர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், ஆசிரியர் பாரதியை சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரிய ஆசிரியர் பாரதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், மாணவிகள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை என வாதிடப்பட்டது.