மதுரை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டணம் குறித்த தகவல் பலகையை வைக்க உத்தரவிடக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரே மருத்துவத்திற்குப் பலவகையான கட்டணங்களை வசூலிக்கின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவத்தில் "சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என இருவழி பிரசவங்களுக்குமே அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெரும் அளவில் கட்டணம் வசூலிப்பு
அறுவை சிகிச்சை எனில் இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின்னரும் தாயும், சேயும் மருத்துவமனையில் மூன்று முதல் ஐந்து நாள்கள் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறி, அறைக் கட்டணம், பரிசோதனைக்கான செலவுகள் எனப் பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.