கரோனா பாதிப்பு எதிரொலியாகத் தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறு வரும் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூல்செய்யப்பட்டது. இந்தச் சுங்கக் கட்டண வசூல் மையங்களில் ஒவ்வொரு வாகனமும் நின்று நின்று வருவதால் நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.