பேராம்பூர் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கிவருகிறது. அரசு விதிகளின்படி, ஆற்றின் இருகரைகளிலும் 23 மீட்டர் இடம் ஒதுக்கிவிட்டு ஆற்றின் நடுவில்தான் மணல் அள்ளவேண்டும். மேலும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு தான் மணல் அள்ள வேண்டும்.
ஆனால், இந்த விதிகளை மதிக்காமல், இரண்டு கரைகளிலும் இடம் ஒதுக்காமலும் அரசு அனுமதித்த ஒரு மீட்டர் ஆழத்தையும் மீறி இரண்டரை மீட்டர் ஆழம்வரை மணல் அள்ளிவருகின்றனர். அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் குடிநீரின் உப்புத்தன்மை அதிகரித்து குடிக்க தகுதியற்றதாகிவருகிறது.
இந்தக் குவாரியால் எங்கள் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புகுள்ளாகின்றனர். விதிகளை மீறி இயங்கும் அரசு மணல் குவாரியின் அனுமதியை ரத்து செய்யக் கோரி எங்கள் கிராமத்தின் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.