மதுரை அலங்காநல்லுாரைச் சேர்ந்த அம்பிகாபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை வாடிப்பட்டி, தாதம்பட்டியிலிருந்து சிட்டம்பட்டிவரை சுற்றுச்சாலை அமைக்க 2018 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது.
'நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தல்; தற்போதைய நிலையே தொடரட்டும்' - தேசிய நெடுஞ்சாலை
மதுரை: தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக நிலத்தை கையகப்படுத்த தடைக்கோரிய வழக்கில், நிலத்தை கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையில் தற்போதைய நிலையே தொடர சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
!['நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தல்; தற்போதைய நிலையே தொடரட்டும்' உயர்நீதிமன்ற கிளை மதுரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:44-tn-mdu-01-high-court-high-way-land-script-tnc10001-04062020142855-0406f-1591261135-434.jpg)
முல்லைப் பெரியாறு பாசன இருபோக பாசன நிலம், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக சாலை அமைக்க உள்ளனர். இதனால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
பருவமழை தொடங்க உள்ளது. இதனால் விவசாயம் முழு வீச்சில் நடைபெறும். இந்நிலையில் அலுவலர்கள் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
எனவே புதிய தேசிய நெடுஞ்சாலை (தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை) அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சி. சரவணன் அமர்வு, நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையில் மறு உத்தரவு வரும்வரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.