மதுரை:ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படும்தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இருவர்மீதும்வழக்குப்பதிந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள கணேசன் மனைவி அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலகப் பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று (செப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "நிதி நிறுவன வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அகிலாண்டம் முதல் குற்றவாளியாக உள்ள கணேசன் என்பவரின் மனைவி.
இவர் துபாய், மலேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். இவர் பெயரில் மலேசியாவில், ரூ. 551 கோடி முதலீட்டில் நிறுவனங்கள் உள்ளன " எனத் தெரிவித்தார்.
பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்