தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் வெளுத்து வாங்கும் மழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை: தொடர்ந்து பெய்துவரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Rain in madurai
Rain in madurai

By

Published : Nov 16, 2020, 11:00 PM IST

தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி தற்போது வரை மதுரையில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது .

மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக மேலும் சில நாட்கள் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் மதுரையில் பல தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளித்தது.

ABOUT THE AUTHOR

...view details