மதுரை விமான நிலையத்திற்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு மக்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத் துறை அமைச்சர் - மதுரை விமானநிலையம்
மதுரை: பருவமழை காலங்களில் நோய்த்தாக்குதல் சவால்களை எதிர்கொள்ள மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
minister
தமிழ்நாடு மக்கள் பருவமழை காலங்கள், திருவிழா, ஆன்மிக விழாக்கள் போன்ற மூன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. முகக்கவசங்களுடனும் சமூக இடைவெளியைப் பின்பற்றி இருக்க வேண்டும். பருவமழை காலங்களில் நோய்த்தாக்குதல் சவால்களை எதிர்கொள்ள மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.