மதுரை:உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு புதுப்பட்டியைச்சேர்ந்த தர்மராஜ் மற்றும் ஆண்டாள் தம்பதியின் மகன்கள் தான், இரட்டையர்களான ராம் மற்றும் லட்சுமணன். இதில் லட்சுமணன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றவர்.
4 ஆண்டுகளாக ராணுவத்தில் பணி செய்து வந்த லட்சுமணன், இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு இருந்தபோது, பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வீரமரணம் அடைந்தார். லட்சுமணனின் இறப்பு செய்தியைக்கேட்டு தும்மக்குண்டு கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
தனது மகன் நாட்டுக்காக இன்னுயிரை துறந்தது பெருமை அளித்தாலும், இழப்பைத் தாங்க முடியவில்லை என தந்தை தர்மராஜ் வேதனைபடக்கூறியுள்ளார்.