திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பையும், 2010ஆம் ஆண்டு ஆட்டோ ஒர்க்க்ஷாப் மெக்கானிக் படிப்பையும் முடித்துவிட்டு, ஈஸ்வரன் ஆட்டோ டீசல் ஒர்க்ஸில் 2010 முதல் 2011ஆம் ஆண்டு வரை வேலை செய்த அனுபவம் உள்ளது.
கடந்த பிப்ரவரி 2018ல் மோட்டார் வாகன ஆய்வாளர் வேலைக்கு காலியிடம் உள்ளதாக விளம்பரத்தை பார்த்து எனக்கு தகுதி இருப்பதால் அந்த வேலைக்கான தேர்வை கடந்தாண்டு ஜூன் மாதம் எழுதினேன். அந்தத் தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 113 காலியிடம் உள்ளதாக விளம்பரம் வெளியான நிலையில், 33 பேர் பெயர் மட்டுமே தேர்வுப்பட்டியலில் உள்ளது.