திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நான் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் பட்டங்களை எஸ்.வி.என் கல்லூரி மற்றும் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளேன். மேலும், சட்டப்படிப்பினை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மூன்றாண்டுகள் முழுநேர வகுப்பில் பயின்றுள்ளேன்.
நான், தற்போது, டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வில் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆனால், முதன்மை தேர்வுக்கான அழைப்பாணை எனக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, தபால் வழியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு விதிகளை மீறி அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.