மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு சிறைகளில் தண்டனை கைதிகள் செய்யும் வேலைக்காக வழங்கப்படும் ஊதியத்தில் 20 விழுக்காடு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. பிடித்தம் செய்யும் பணம் முறையே பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களது மறுவாழ்வு பணி பாதிக்கிறது.
எனவே, நிலுவையிலுள்ள பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்கவும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை உறுதி படுத்தவும், இதற்கான பணிகளை மேற்கொள்ள உரிய காலக்கெடுவை நிர்ணயிக்கவும், நிதியை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.