தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்! - கர்ப்பிணிப் பெண்கள்

மதுரை: மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர்,சிறு குழந்தைகளை வைத்திருக்கும் நபர்கள், கர்ப்பிணி பெண்களை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்கக் கோரும் அறிவிப்பாணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

Madurai meenakshi amman

By

Published : Jun 4, 2019, 6:15 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தரிசனத்தின்போது எப்போதுமே கூட்டம் அதிகமாக இருப்பதால்,மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், சிறு குழந்தைகளை வைத்திருக்கும் நபர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சாமி தரிசனம் செய்ய தனி வரிசை அமைத்து, அவர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்’” என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மணிகண்டன், கடந்த மே 23ஆம் தேதி இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால் எனது மனுவின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக கூட்டம் காரணமாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய இயலவில்லை. ஆனால் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பு வரிசை வழியாக சென்று எளிதில் சாமி தரிசனம் செய்கிறார்கள். இதேபோல் மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர்,சிறு குழந்தை வைத்திருக்கும் நபர்கள், கர்ப்பிணி பெண்களை சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனு அளித்தேன்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது குறித்து கடந்த 2018 நவம்பர் 26ஆம் தேதியன்றே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் இணை ஆணையர், கோயில் பணியாளர்களுக்கு அறிவிப்பாணை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த அறிவிப்பாணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்துவைத்தனர் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details