தூத்துக்குடியைச் சேர்ந்த நாராயணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குஒன்றைத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் பிரசித்திப்பெற்றது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். விழா நாட்கள்தவிரபிற நாட்களில் பக்தர்கள் கோயில் அருகே வரைவாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய வீதிகள்மூலமாகக்கோயிலைச்சென்றடைய இயலும். இந்த வீதிகளில் ஏராளமான மக்கள் குடியிருந்துவருகின்றனர். ஆகையால் பொதுவாகவே இந்த தெருக்கள் எப்போதும் மக்கள் நெருக்கம் மிகுந்தபகுதியாகக்காணப்படுகிறது. இந்த தெருக்களைத்தவிரகோயிலுக்குசெல்ல வேறுவழிகளும் இல்லை.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதிகளில் அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தெருக்களை ஆக்கிரமித்து பெரிய மேடை அமைப்பது, ஃபிளக்ஸ்போர்டுகள், பேனர்கள் வைப்பது போன்ற செயல்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அவசரக்காலங்களில்ஆம்புலன்ஸ்கூட செல்லமுடியாத வகையில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பக்தர்களைஏற்றிச் செல்லும் பேருந்துகளும் அந்த வழிகளில் பயணிக்க இயலாத நிலை உருவாகிறது. இதனால், மூன்று கி.மீ., தூரம் வயதான பக்தர்கள் உள்பட அனைவரும் நடந்தே செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.