ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த மாதம் 30ஆம் தேவர் குருபூஜை நடைபெற்றது. அப்போது திருவாடணை வட்டாட்சியரின் ஜீப், காவல் துறையினரின் வேன் மீது சிலர் ஏறி நின்று நடனமாடினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து மண்டலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் மீது பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, அரசு ஊழியர்கள் ஆபாசமான வார்த்தைகளில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தேடிவரும் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பி.செந்தில் குமார், முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.