தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு முடிவில் குளறுபடி... OMR தாளை வழங்க நீதிமன்றம் உத்தரவு... - விடைத்தாளில் குளறுபடி

நீட் தேர்வு முடிவுகளில் விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

hc madurai branch  original OMR sheet  OMR sheet  OMR sheet issue  NEET exam  நீட் தேர்வு முடிவில் குளறுபடி  OMR தாளை வழங்க நீதிமன்றம் உத்தரவு  விடைத்தாளில் குளறுபடி  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
OMR sheet

By

Published : Sep 9, 2022, 1:57 PM IST

மதுரை:திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் 12 ஆம் வகுப்பு முடித்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கான நீட் தேர்வை எழுதினேன். தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன். அதன்பின் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் OMR விடைத்தாள் பக்கங்களை பதிவேற்றம் செய்தது.

இதை பார்த்த அதிர்ந்துபோனேன். 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு சரியான பதில் எழுதியபோதும் 115 மதிப்பெண்களே கிடைத்துள்ளது. 115 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய OMR விடைத்தாளை எனது பெயரில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த OMR விடை தாள் நான் எழுதியது இல்லை. எனது விடைத்தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று (செப் 9) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்மோகன் ஆஜராகி வாதாடினார். இதனை கேட்ட நீதிபதி, மாணவர் எழுதிய நீட் தேர்வின் அசல் OMR விடைதாள் அதனுடைய கார்பன் விடைத்தாளையும் நீட் தேர்வு முகமையின் செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் பூஜ்யத்திற்கும் கீழ் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details