தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு தள்ளுபடி! - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Jun 3, 2020, 5:41 PM IST

தென்காசியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாடு அரசு ஜூன் 15ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான மனநிலையில் இருக்க மாட்டார்கள். ஆகவே, மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.

மேலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்கு முன்பாக பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்து அரசு முடிவெடுக்கவில்லை. ஆகவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தபோது, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details