தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமாரவயலூர் கோயில் அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..! - நீதிபதி பரத சக்கரவர்த்தி

குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2023, 5:19 PM IST

மதுரை: ஸ்ரீரங்கம், குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்நாடு அரசால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பிரபு, ஜெயபாலன் ஆகியோர் நியமனங்களை ரத்து செய்து நீண்ட காலமாக பணியாற்றும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட இரண்டு அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்தும் ஆகம விதிக்கு முரணாக, குமாரவயலூர் கோயிலில் அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்த கோயிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகள் பணியாற்றியவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் எனறும் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை செயலர் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், "தனி நீதிபதி இந்து சமய அறநிலைத்துறை சட்டங்களின்படி அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதையும் ஏற்கனவே உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க தவறியுள்ளார். மேலும், கோயிலின் ஆகம பூஜைகள் செய்பவர்கள் குறிப்பிட்ட பிறப்பால் சாதி ரீதியான அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை என்பதையும் நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.

அரசால் நியமனம் செய்யப்பட்டவர்கள் முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் மேலும் ஆகமங்களின்படி கட்டப்பட்ட கோயில்களில் பூஜைகள் செய்வதற்கு பிராமணர்களான சிவாச்சாரியார்கள் மட்டுமே தகுதியானவர்கள் என ஆகமங்கள் படி கூட எந்த விதியும் இல்லை.

ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பாக தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கின் உத்தரவுகளையும் நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். மேலும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளையும் வழங்கி உள்ளது. இதனை நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை எனவே நீதிபதியின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:பீகாரைச் சேர்ந்த யூடியூபர் கைது வழக்கு: உள்துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details