சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி. ரா என்கிற ராஜநாராயணன், தற்போது புதுச்சேரியில் வசித்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வார பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, ஆதிதிராவிடர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கி. ரா மீது வன்கொடுமை சட்டத்தில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் அம்மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கி. ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மனுதாரர் கி. ரா பிரபல எழுத்தாளர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அண்மையில் அவரது மனைவி மரணம் அடைந்தார். மேலும் கி. ரா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். கருத்துரிமை தொடர்பான வழக்குகளில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு பெருமாள் முருகன் வழக்கில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பிறப்பித்த உத்தரவை நீதித்துறை நடுவர்கள் படித்து பார்க்க வேண்டும். கி. ரா மீது வன்கொடுமை சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை எனவே கி. ரா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பயணச்சீட்டு மோசடி வழக்கு: நடத்துநர் பணிநீக்கம் செல்லும் - உயர்நீதிமன்றம்