மதுரை:உயர் சாதியினர் தங்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும் மகா சிவராத்திரி விழாவில் தங்களை குல சாமி பூஜை செய்ய அனுமதிக்க கோரியும் வழக்கு விசாரணையில் அனைவரும் அமைதியான முறையில் வழிபாடு செய்வதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதனை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உயர் சாதியினர் தங்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும்; எனவே, 'மகா சிவராத்திரி' விழாவில் (Maha Shivratri) தங்களை குல சாமி பூஜை செய்ய அனுமதிக்க கோரி, ஒரு தாக்கல் செய்த மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகாவில் உள்ளது, அருள்மிகு மாதரசி அம்மன் கோயில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இந்த கோயில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ கோயிலாக வழிபட்டு வருகின்றோம். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய உயர் சாதியினர் சிலர் இந்த கோயிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.