விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காவல் துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இதில் விரைவில் ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.