தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? மத்திய அரசு  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...!

By

Published : Oct 7, 2020, 6:24 PM IST

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென் தமிழ்நாடு, கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், தற்போது கரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல்செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சைப் பெற்று பயன்பெற்றிருப்பார்கள்.

ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் தமிழ்நாட்டோடு அறிவிப்பு வெளியான பிற மாநில மருத்துவமனைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்தும் மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க...தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: மருத்துவமனையில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் நாய்கள்...!

ABOUT THE AUTHOR

...view details